Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

10 MLA’s  resign in Tamilnadu, Vijayakanth loses Leader of opposition status.

By   /  February 21, 2016  /  Comments Off on 10 MLA’s  resign in Tamilnadu, Vijayakanth loses Leader of opposition status.

    Print       Email

THJVN_DMDK_FAST_6_2386258g10 எம்எல்ஏக்கள் விலகல் ; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 28 இடங்களில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

InCorpTaxAct
Suvidha

தேர்தல் வெற்றிக்கு பின்னர் அ.தி.மு.க. – தே.மு.தி.க. உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மோதிக் கொண்டனர். அ.தி.மு.க. அரசு மீது விஜயகாந்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

இந்நிலையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே திடீர் பிளவு ஏற்பட்டது. அக்கட்சி எம்.எல்.ஏ.க்களான சுந்தர்ராஜன் (மதுரை மத்திய தொகுதி), அருண்பாண்டியன் (பேராவூரணி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்), தமிழழகன் (திட்டக்குடி), மா.பாண்டியராஜன் (விருது நகர்), அருண் சுப்பிரமணியம் (திருத்தணி), சுரேஷ்குமார் (செங்கம்) ஆகிய 8 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். இவர்கள் சட்டசபையில் தே.மு.தி.க.வின் முடிவுக்கு கட்டுப்படாமல், அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வந்தனர்.

அ.தி.மு.க. அரசையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் அவர்கள் புகழ்ந்து பேசி வந்தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் தனித்தனியாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, ‘‘தங்களது தொகுதி பிரச்சினைகளுக்காகவே முதல்–அமைச்சரை சந்தித்து பேசினோம் என்று தெரிவித்தனர்.

சட்டமன்ற தேர்தல் முடிந்து 6 மாதங்களே நிறைவு பெற்றிருந்த நிலையில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் விஜயகாந்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், சாந்தி, மைக்கேல் ராயப்பன், தமிழழகன், மா. பாண்டியராஜன், அருண் சுப்பிரமணியம், சுரேஷ் குமார் ஆகிய 8 பேரும் ஒன்றாக சேர்ந்து சபாநாயகர் தனபாலை திடீரென சந்தித்தனர்.

அப்போது அனைவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அவரிடம் கடிதம் கொடுத்தனர்.  இதே போல பா.ம.க.வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றிருந்தது. அக்கட்சி தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராமசாமி நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வானார்.

அ.தி.மு.க.வுடான கருத்து வேறுபாட்டால் கிருஷ்ணசாமி இடையில் தி.மு.க. அணிக்கு சென்று விட்டார். ஆனால், ராமசாமி எம்.எல்.ஏ. சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டார்.

பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசும், டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவரும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட சீட் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நிருபர்களைச் சந்தித்த சபாநாயகர் தனபால் “தேமுதிக எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டேன். அதனால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →