அசாம்: மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 13 பேர் பலி
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் மேற்கேயுள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதிக்கு இன்று பிற்பகல் வந்த சில தீவிரவாதிகள் கடைவீதியில் இருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் அசாம் மாநில முதல் மந்திரி சரபானந்த் சோன்வால்-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்குள்ள நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.