வெள்ளத்தில் மிதக்கிறது மத்திய பிரதேசம்: 24 மணி நேரத்தில் 7 பேர் பலி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நர்மதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகன் மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் அம்மாநிலத்தின் 51 மாவட்ட கலெட்டர்களும் கலந்து கொண்டனர்.
இதனிடையே மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி சவுகானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார். அப்போது மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.