Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

2 People killed  in Jaya’s  campaign ;  Ramadoss & Vaiko  asks Jaya to pay compensation

By   /  April 12, 2016  /  Comments Off on 2 People killed  in Jaya’s  campaign ;  Ramadoss & Vaiko  asks Jaya to pay compensation

    Print       Email

201508310020440178_Dr-Ramadoss-Vaiko-condemned_SECVPFஜெயலலிதா தேர்தல் கூட்டத்தில் இருவர் பலி; ஜெயலலிதா உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் – ராமதாஸ், வைகோ வலியுறுத்தல்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

InCorpTaxAct
Suvidha

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், வெயிலில் மயங்கியும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கூட்டத்திற்காக கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை 3.00 மணிக்கு ஜெயலலிதா பேசிய நிலையில், காலை 11.00 மணிக்கே பொதுமக்கள் வரவழைக்கப்பட்டு சுட்டெரிக்கும் வெயிலில் அமரவைக்கப்பட்டனர்.

இதனால் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போதே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலர் மயங்கி விழுந்தனர். இது குறித்த செய்தி பரவியதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றதால் மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மேலும் பலர் மயக்கமடைந்தனர்; பலர் காயமடைந்தனர்.

மயங்கி விழுந்த மக்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவ்விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அ.தி.மு.க.வினரும், காவல்துறையினரும் தாமதப்படுத்தினார்கள். இதனால் மயங்கி விழுந்த 19 பேரில் 9 பேரின் நிலைமை மோசமடைந்தது.

ஜெயலலிதாவின் அணுகுமுறையும், அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இதற்கு காரணம் ஆகும். இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

விருத்தாசலத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உரை ஆற்றிய பிரச்சாரக் கூட்டத்தில், 2 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இறந்தவர்கள் குடும்பத்திற்குப் பத்து இலட்சமும், காயமுற்றோருக்கு ஒரு இலட்சமும் அண்ணா தி.மு.க. கட்சியில் இருந்து வழங்க வேண்டும்.

முதல்–அமைச்சர் கலந்து கொண்ட விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் சிலர் உயிர் இழக்கவும், பலர் உடல் நலிவுறவும் காரணமான சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →