Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

2 workers killed for refusing to pay a bribe of Rs 100 policemen beaten to death.

By   /  August 6, 2016  /  Comments Off on 2 workers killed for refusing to pay a bribe of Rs 100 policemen beaten to death.

    Print       Email

4fec0322b0b31ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்த 2 தொழிலாளர்களை அடித்து கொன்ற போலீஸ்காரர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின் புரி நகரில் செங்கற்கள் பாரம் ஏற்றிய லாரியில் 4 தொழிலாளர்கள் அமர்ந்து சென்றனர்.

InCorpTaxAct
Suvidha

கொஸ்மா கிராசிங் என்ற இடத்தில் லாரி சென்ற போது அங்கு சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் மறித்து லாரி செல்ல வேண்டு மானால் ரூ.100 தருமாறு லஞ்சம் கேட்டனர். அதற்கு டிரைவர் வினேஷ் மறுத்து விட்டார். இதனால் போலீஸ்காரர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் திலிப் யாதவ் (22) பங்கஸ் யாதவ்(24) ஆகிய 2 தொழிலாளர்களை போலீஸ்காரர்கள் பிடித்து வைத்துக்கொண்டு சரமாரியாக தாக்கினார்கள். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 தொழிலாளர்களின் பிணங்களை அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டனர்.

லாரி வேகமாக திரும்பிய போது இருவரும் குளத்தில் விழுந்து இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் உடன் சென்ற தொழிலாளர்கள் இதை மறுத்ததுடன் போலீசில் புகார் செய்தனர்.

மேலும் பிரேதபரி சோதனை அறிக்கையிலும் இருவரும் குளத்தில் மூழ்கி சாகவில்லை. அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதற்கான காயங்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்களும் உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4 போலீஸ்காரர்கள், 2 ஊர்காவல் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

-Amudhavan

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →