டெல்லியில் 21 இடங்களில் பெண்களுக்கான இலவச மருத்துவ மனைகள் – கேஜ்ரிவால் தொடங்கினார்.
நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் தாய், சேய் நல விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாய்-சேய் நல விடுதிகள் பிரசவ ஆஸ்பத்திரிகளாகவும் செயல்படுகிறது.
ஆனால் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் புதிதாக இலவச மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெண்கள் இங்கு வந்து தைரியமாக தங்களது உடல் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி சிகிச்சை பெற முடியும். அதற்கு ஏற்ப மருந்து பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையும் இணைந்து மருந்து கடைகளும் செயல்படுகின்றன.
உடல் நலக்கோளாறுகளால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக வெளியான புள்ளி விவரங்களைத் தொடர்ந்து பெண்களுக்கென பிரத்யேக மருத்துவமனைகளை தொடங்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
முதல் கட்டமாக 21 இடங்களில் இந்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. முனீர்கா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில் முன்பு இருந்த மருத்துவமனைகள் ரூ.5 கோடி செலவில் சில இடங்களில் மட்டும் தொடங்கப்பட்டன. இப்போது ரூ.20 லட்சம் செலவில் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது போன்ற 1,000 மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.