Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

3 Women candidates to oppose Jaya in R.K.Nagar

By   /  April 21, 2016  /  Comments Off on 3 Women candidates to oppose Jaya in R.K.Nagar

    Print       Email

Jaya-Shimla_2812990gஜெயலலிதாவை எதிர்த்து மூன்று கட்சிகள் சார்பாக மூன்று பெண் வேட்பாளர்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னையில் முதல் முதலில் இந்த தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா இப்போது பொது தேர்தலிலும் அதே தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

ஜெயலலிதாவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில் எதிர்கட்சிகள் அனைத்தும் தனிக்கவனம் செலுத்தின. ஆண் வேட்பாளரை நிறுத்தினால் பெண் வாக்காளர்களின் கவனம் பெண் என்ற ரீதியில் ஜெயலலிதா பக்கம் திரும்பும் என்று கருதி பா.ஜனதாவை தவிர எல்லா கட்சிகளுமே பெண் வேட்பாளர்களையே அறிவித்துள்ளன.

தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார். இவர் சமூக சேவைகள் மூலம் அந்த பகுதியில் நன்கு அறிமுகமானவர்.

மக்கள் நல கூட்டணி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி களம் இறக்கப்பட்டுள்ளார். சமூக சேவை மற்றும் பெண்298698290_0728e1883c_z உரிமைகளுக்காக போராடி வருபவர்.

பா.ம.க. சார்பில் ஆக்னஸ் என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜனதா மட்டும் எம்.என்.ராஜா என்ற ஆண் வேட்பாளரை களம் இறக்கி இருக்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →