போலீஸ்காரர் வயிற்றிலிருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
நாளுக்குநாள் எடை குறைந்துவந்த அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அவரது வயிற்றுக்குள் புற்றுக்கட்டி போன்ற திடப்பொருள் இருப்பது தெரியவந்தது. பின்னர், ஸ்கேன் மூலம் துல்லியமாக பரிசோதித்தபோது, அவரது வயிற்றில் தேங்கி கிடந்த கத்தி குவியல், வயிறு, ஈரல் மற்றும் சிறுநீரகங்களை கிழித்து பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிய வந்தது.
கடந்த ஓராண்டு காலமாக மனநிலை சற்றே பாதிப்படைந்த நிலையில் கத்தியை விழுங்கும் தீராத ஆசை கொண்ட சுர்ஜித் சிங், கடந்த இரு மாதங்களாக பல கத்திகளை விழுங்கி வைத்ததாக அறிந்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய தீர்மானித்தனர்.
ஆபரேஷன் மூலம் அவரது வயிற்றில் இருந்த 40 கத்திகளை அகற்றிய பின்னர் சுர்ஜித் சிங் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.