Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

48th Anna Memorial day : Stalin heads DMK’s peace rally.

By   /  February 3, 2017  /  Comments Off on 48th Anna Memorial day : Stalin heads DMK’s peace rally.

    Print       Email

16388194_740125986147274_4899124881819579204_nஅண்ணாவின் 48வது நினைவு தினம்; ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.

அண்ணாவின் 48-வது நினைவுதினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். கடற்கரை சாலை முழுமைக்கும் 144 தடை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் பேரணி எதுவும் நடைபெறுமா என்ற ஐயம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் வெளியூர்களிலிருந்து பஸ்ஸில் வந்தவர்கள் உட்பட அண்ணா சாலை விருந்தினர் மாளிகை முன்பு  காலையிலிருந்தே குவியத் தொடங்கினர். ஸ்டாலின் வந்ததும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணி துவங்கியது.

InCorpTaxAct
Suvidha

காலை 8.10 மணியளவில் சேப்பாக்கத்தில் இருந்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கியது. பிரமாண்டமான மலர் வளையத்தை சுமந்தபடி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.

முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏக்கள் பி.கே. சேகர்பாபு, ஜெ. அன்பழகன், கு.க.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

8.40 மணிக்கு பேரணி அண்ணா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, 16427686_740126029480603_5781936737406722357_nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மகளிர் அணியினர், தொண்டர் அணியினர், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  அண்ணா இறந்து 48 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளாத முதல் அண்ணா நினைவு தினம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Tips for Surviving the Coronavirus Pandemic

Read More →