Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

570 Crore container case , High court verdict tomorrow.

By   /  June 28, 2016  /  Comments Off on 570 Crore container case , High court verdict tomorrow.

    Print       Email

a truckload570 கோடி விவகாரம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படவேண்டுமா? உயர்நீதி மன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் சிக்கியது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் அது ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணம் என்று தெரிவிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சர்ச்சை எழுப்பினர்.

InCorpTaxAct
Suvidha

பிடிபட்ட பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து சி.பி.ஐ.தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி சி.பி.ஐ. பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கிகளிடம்  தகவல் பெற முடியும் என்றும், இதுபோன்ற விவகாரங்களை சி.பி.ஐ. விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், நாளை இறுதி விசாரணை முடிந்ததும் பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →