Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

570 Crores in 3 containers seized in Tirupur.

By   /  May 14, 2016  /  Comments Off on 570 Crores in 3 containers seized in Tirupur.

    Print       Email

tirupur-cash-seizu_2853257fமூன்று கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் –திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

InCorpTaxAct
Suvidha

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு பணத்தை கொண்டு செல்வதாக கூறப்பட்டது. ஆனால் இதற்குரிய எந்த ஆவணங்களும் இல்லாததால் 3 கண்டெய்னர் லாரியுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது கண்டெய்னர் லாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை ராணுவம், மற்றும் போலீசார் பாதுகாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கண்டெய்னர் லாரிகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஜெயந்தி பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருப்பூரில் பறக்கும் படையினர் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர். இது money3வங்கிக்குரிய பணம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அதற்குரிய ஆவணம் சமர்பிக்கப்படவில்லை.

எனவே ரூ.570 கோடி பணம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாங்கி அதிகாரிகள், மாவட்ட அதிகாரி, போலீஸ் அதிகாரிகள், வருமான வரி துறை அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள். அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தருவார்கள். அதன்பிறகே திரும்ப ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

எனவே அதுவரைக்கும் 3 கண்டெய்னர் லாரிகளில் உள்ள ரூ.570 கோடி பணத்தின் பாதுகாப்புக்காக துணை ராணுவம், போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →