Loading...
You are here:  Home  >  Community Events  >  Current Article

7ft bronze statue of Kalam to be unveiled at memorial

By   /  July 25, 2016  /  Comments Off on 7ft bronze statue of Kalam to be unveiled at memorial

    Print       Email

201607191032237107_7ft-bronze-statue-of-Kalam-to-be-unveiled-at-memorial-on_SECVPFஅப்துல் கலாம் நினைவிடத்துக்கு 7 அடி உயர வெண்கல சிலை வந்தது: இன்று பீடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் அறிவுசார் மையம், மணிமண்டபம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முன் வந்துள்ளது. நாளை மறுநாள் (27-ந்தேதி) அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. மேலும் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் பார்வையிடும் வகையில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

InCorpTaxAct
Suvidha

இங்கு சிலை அமைக்க பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்ட வெண்கல சிலை வேன் மூலம் நினைவிடத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் தற்காலிக அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அப்துல்கலாம் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று (25-ந்தேதி) அப்துல்கலாமின் முழுஉருவ 7 அடி உயர வெண்கல சிலை பீடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் குபேந்திரன் மணலால் 100 முகங்கள் கொண்ட அப்துல்கலாமின் முக சிற்பத்தை அமைத்து வருகிறார்.

நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பாதுகாப்புதுறை 201607250749314212_Abdul-Kalam-memorial-location-7-ft-bronze-statue_SECVPFபொறியாளர்கள் பணிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →