Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

8  parties  in  DMK alliance?

By   /  February 12, 2016  /  Comments Off on 8  parties  in  DMK alliance?

    Print       Email

திமுக அணியில் 8 கட்சிகள் சேர வாய்ப்பு?download (5)

வருகிற மே மாதம் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் பலமுனை போட்டி உருவாகிறது. ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் பிரதான அணிகளாக களத்தில் குதிக்க தயாராகின்றன.

InCorpTaxAct
Suvidha

புதிதாக உருவான மக்கள் நலக்கூட்டணி வேறு கட்சிகளுடன் கூட்டணிக்காக எதிர்பார்க்காமல் தனித்துப் போட்டி என்ற துணிச்சலுடன் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. அடுத்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றின் நிலை என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

பா.ம.க.வை பொறுத்தவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியதுடன் அன்புமணியை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவித்து அவரது தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து சேரலாம் என்று அழைப்பும் விடுத்துள்ளது.

தனது நிலையை தெளிவாக அறிவிக்காத தே.மு.தி.க. ஒரே நேரத்தில் பா.ஜனதாவுடனும், தி.மு.க.வுடனும் தொடர்பில் இருக்கிறது. இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தே.மு.தி.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விரும்புகிறார்கள். வருகிற 20–ந்தேதி காஞ்சிபுரம் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தவிர வேறு முடிவு எடுத்தால் கட்சி பிளவுபடும் நிலை ஏற்படும் என்ற அச்சமும் விஜயகாந்திடம் உள்ளது.

எனவே தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்த் முடிவு எடுத்து விட்டதாகவும் அதை அவர் ரகசியமாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு தி.மு.க. மீதான விமர்சனத்தை படிப்படியாக குறைத்து கொண்டார்.

கூட்டணி பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்குவதுடன் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவையும் தி.மு.க.வே ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் அவசர அவசரமாக தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தது.

அத்துடன் 13–ந்தேதி காங்கிரஸ் மேலிட பிரதிநிதி குலாம்நபி ஆசாத் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணிப் பேச்சு வார்த்தையை அதிகாரப் பூர்வமாக நடத்துவார் என்ற அறிவிப்பையும் காங்கிரஸ் வெளியிட்டது. அப்போது தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்கிறார்கள். காங்கிரசுக்கு இந்த தடவை 30 அல்லது 35 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில் காங்கிரஸ், தே.மு.தி.க.வைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி உள்பட சில கட்சிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து செயல்பட்டு வரும் அணியினரை இழுக்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஒரு அணியை இழுக்கும் முயற்சியும் நடக்கிறது.

எற்கனவே புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விவசாய தொழிலாளர்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் உள்ளன. தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து வரும் அணிகளையும் சேர்ந்தால் தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. 140 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. இது இப்போதைய நிலவரம். இந்த நிலைமை மாறவும் செய்யலாம்

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →