Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

8 songs in Thana Serntha Kootam

By   /  June 10, 2017  /  Comments Off on 8 songs in Thana Serntha Kootam

    Print       Email

8 பாடல்களோடு உருவாகும்தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் 8 பாடல்களோடு உருவாகி வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

InCorpTaxAct
Suvidha

‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைப் பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘ஸ்பெஷல் 26’ படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால், தமிழில் 8 பாடல்கள் இருக்கிறது. அனைத்துமே படத்தின் கதையோடு ஒன்றியே இருக்கும். மேலும், அனைத்துமே மாண்டேஜ் பாடல்கள் வடிவிலேயே இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →