Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

800 jobless Indians starving in Saudi Arabia, Sushma Swaraj steps in to help

By   /  July 31, 2016  /  Comments Off on 800 jobless Indians starving in Saudi Arabia, Sushma Swaraj steps in to help

    Print       Email

சவுதியில் வேலையை இழந்து உணவின்றி தவிக்கும் 800  இந்தியர்களுக்கு உணவு: சுஷ்மா நடவடிக்கை

External Affairs Minister Sushma Swaraj shakes hands with her Sri Lankan counterpart GL Peiris during a meeting in New Delhi on July 11, 2014. (Photo: IANS)

InCorpTaxAct
Suvidha

“சவுதி அரேபியாவில் வேலை இழக்கச்செய்யப்பட்ட எந்த ஒரு இந்தியரும் உணவின்றி வாடுதல் கூடாது என்பதை நான் உறுதி செய்கிறேன். நான் அங்குள்ள சூழ்நிலையை மணிக்கொருதரம் கண்காணித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

சவுதி நகரான ஜெட்டாவில் கடந்த 3 நாட்களாக சுமார் 800 இந்தியர்கள் வேலையை இழந்த நிலையில் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை உடனடியாக தீர்க்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வளைகுடா நாட்டுக்கு பயணிக்கிறார்.

இந்தத் தகவலை ட்வீட்டில் தெரிந்து கொண்டு துரிதமாகச் செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜ், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அவர்களுக்கு உணவு வழங்குமாறு உடனே அறிவுறுத்தினார்.

இது பற்றி சுஷ்மா தனது ட்வீட்டில், “சவுதி அரேபியாவில் வேலையை இழந்த இந்தியர்களுக்கு உணவு வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் எம்.ஜே.அக்பர் இந்த விவகாரத்தை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளிடம் விவாதிக்கவுள்ளதாக சுஷ்மா தெரிவித்தார்.

jobless-indians-in-jeddah_650x400_61469880832சவுதி அரேபியாவிலும் குவைத்திலும் இந்தியர்கள் சிலர் பணியாற்றும் நிறுவனங்களில் பல இவர்களுக்கு ஊதியன் வழங்குவதில்லை, தொழிற்சாலைகளை மூடி விடுகின்றனர், அல்லது வேலையை விட்டு துரத்தி விடுகின்றனர் என்று கூறிய சுஷ்மா, “நம் சகோதர சகோதரிகள் சவுதியிலும் குவைத்திலும் கடினமான வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். குவைத் ஓரளவுக்கு நிர்வகிக்கக் கூடிய நிலையில் உள்ளது, ஆனல் சவுதி மிக மோசம்” என்றே கூறுகிறார்.

பிற்பாடு இந்திய பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதன் புகைப்படங்களையுன் சுஷ்மா பகிர்ந்து கொண்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →