Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

A.R.Rahman enthralls audience at UN concert. 2nd Indian to perform at UNO.

By   /  August 16, 2016  /  Comments Off on A.R.Rahman enthralls audience at UN concert. 2nd Indian to perform at UNO.

    Print       Email

13920976_10153730766181720_1227867710459390409_nஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அடுத்து ஐ.நா சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர்; ஏ.ஆர்.ரகுமானுக்கு மேலும் ஒரு மகுடம்.

இந்திய நாட்டின் 70 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம்  இந்தியாவின் சுதந்திர தினம் ஐ.நா.சபையிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஐநா.சபையின் தூதர்கள்,சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி அரங்கேறியது.

இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் ஜாவேத் அலி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த இசைக்கச்சேரியின் மூலம் மறைந்த இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப்  பின் ஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார்.

இதற்கு முன் 1966 ம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐநா 11127727_10152838608281720_2964585692930290277_nசபையில் இசை நிகழ்ச்சி  நடத்தினார். இதனால், ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கிடைத்தது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாளையோட்டி ஐ.நா சபை நேற்று அவருக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →