Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

A.R.Rahman took ‘24’ movie to next stage – praises Surya

By   /  April 11, 2016  /  Comments Off on A.R.Rahman took ‘24’ movie to next stage – praises Surya

    Print       Email

24audiolaunch_2810057f’24’ படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான் –சூர்யா புகழாரம்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியது ஒரு கதையைக் கேட்டவுடன் தயாரிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஒரு அழகான குழுவும் அமைந்தது. அந்த குழுவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரு சாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தவுடன் போய் கை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். காசுக்காக இல்லாமல் அனைவருமே மனதார பணியாற்றி இருக்கிறார்கள்.

20 வயதிற்குள் ஒரு குறும்படம் பண்ணி தேசிய விருது வாங்கியவர் இயக்குநர் விக்ரம் குமார். அவருடைய ஒவ்வொரு படத்தின் கதையும் வேறுபடும். எங்கே வாய்ப்பு இருக்கிறதோ, போய் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு தைரியமான ஆள். அவரைப் போல அனைவருமே கிடைக்கும் வாய்ப்பில் ஜெயிக்க வேண்டும். எல்லைகள் தாண்டியும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணம் விக்ரம் குமார். ‘மனம்’ என்ற ஒரு அழகான தெலுங்கு படத்தைக் கொடுத்துவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார்.

நாலரை மணி நேரம் கதை சொன்னார் விக்ரம். அவர் சொல்லி முடித்தவுடன் எழுந்து நின்று கைதட்டினேன். என் பொழுதுபோக்கிற்காக நான் இந்த படத்தை பண்ணவில்லை. உண்மையாக மனதார ஒரு படத்தை பண்ணியிருக்கிறோம்.

இக்கதைக்காக என்னவெல்லாம் பண்ணலாம் என்று பேசினோம். அப்போது இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான் என்று சொன்னார்கள். உடனே அவருக்கு “ஒரு கதைக் கேட்டேன். நீங்கள் கேட்க வேண்டும். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். 2 நாட்களில் போய் கதைச் சொன்னார். அரை மணி நேரம் போதுமா என்று கேட்டார். ரம்ஜான் நாட்கள் என்பதால் வீட்டில் இருந்து தொடர்ச்சியாக அவருக்கு போன் வந்தது. போய் வந்துவிடுகிறேன் என்று வந்து 6 மணி நேரம் கதை கேட்டார். இக்கதையை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதற்கு முக்கியமான காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான். ‘காலம் என் காதலி’ பாடலை முதலில் கொடுத்துவிட்டு ‘என்ஜாய். ஆல் தி பெஸ்ட்’ என்று குறுந்தகவல் அனுப்பினார்.

சமந்தா மற்ற படங்களை விட இப்படத்தில் மிகவும் அழகாகத் தெரிவார். 20 வருஷம் ஒருவரை ஒருவர் தெரியும் என்று சொல்லிவிட்டு முதல் காட்சி வைத்தால் நித்யா மேனன் அந்த பாத்திரமாக மாறி இருப்பார். அது எப்படி என்று தெரியவில்லை. ஒரு காட்சிக்கு முன்னாடி 20 விநாடிகள் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அப்புறமாக அந்த பாத்திரமாக வருவார். இரட்டை வேடங்களே பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இதில் மூன்று வேடங்கள் பண்ண வைத்திருக்கிறார் விக்ரம் குமார்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →