Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Aam Admi to woo Irom Sharmila promises to give Manipur CM’s post

By   /  August 13, 2016  /  Comments Off on Aam Admi to woo Irom Sharmila promises to give Manipur CM’s post

    Print       Email

irom-sharmilaஐரோம் ஷர்மிளா பக்கம் திரும்பிய ஆம் ஆத்மி கட்சி: மணிப்பூரின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐரோம் சர்மிளா கட்ந்த 9-ம்தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

அதன்பின்னர், மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்–அமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். நீண்டகாலமாக திட உணவு எடுத்துக்கொள்ளாததால், தற்போதும் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மணிப்பூர் மாநில ஒருங்கிணைப்பாளர் தவுதம் மணிஹார் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐரோம் சர்மிளாவை சந்தித்து பேசினர். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று ஐரோம் ஷர்மிளாவைக் கேட்டுக்கொண்ட அவர்கள், முதல்- மந்திரி வேட்பாளராக நிறுத்த நாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறினர்.

சுயேட்சையாக போட்டியிடும் சர்மிளாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →