Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Actor Kalabhavan Mani’s death case was transferred to CBI

By   /  May 18, 2017  /  Comments Off on Actor Kalabhavan Mani’s death case was transferred to CBI

    Print       Email
நடிகர் கலாபவன் மணி மரண வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததன. இதுகுறித்து கேளரா போலீசாரும் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, கலாபவன் மணி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று அவரது சகோதரரும், மனைவி நிம்மியும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து, இம்மனுவை விசாரித்த  கேரள உயர்நீதிமன்றம்  கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் கலாபவன் மணி மரண வழக்கு விசாரணை இன்று சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →