நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில வாரம் ஓய்வில் இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தன் அடுத்த படமான சபாஷ் நாயுடுவின் ஷூட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். 42 நிமிடங்களுக்கான காட்சிகளை படமாக்கிவிட்டு, கடந்த வாரம் தான், அமெரிக்காவில் இருந்து, இந்தியா வந்தார் கமல்ஹாசன்.மூன்று மொழிகளில் படமாக்கப்படும் ‘சபாஷ் நாயுடு’வில், கமலுடன் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.