அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் சரத்குமார். கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பேட்டி.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..
கூட்டணியில் அங்கம் வகிக்கிற ச.ம.க. கட்சியின் தலைவர்தான். இதுவரை யாரும் என்னிடம் கூட்டணி தொடர்பாக பேசாத சூழ்நிலையில் யார் எந்த கூட்டணியில் இருக்கிறோம்? என்பது தெரியாத ஒன்றாக உள்ளது.
ஒரு வாரத்தில் ச.ம.க. கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. மாற்றத்தை நோக்கி இந்த இயக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. மாற்றம் என்ன? மக்களுக்கு என்ன மாற்றம் வேண்டும்? என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்? என்பது குறித்து எங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும்.
கூட்டணி என்பது ஒரு கட்சிக்கு ஒரு ‘ஸ்டைல்‘ என்று சொல்லலாம். இது தேர்தல் நேரத்துக்காக மட்டும் அமைகிறது. மக்களுக்கான கூட்டணியாக அமைவதில்லை. தேர்தலுக்குப்பிறகு அந்த கூட்டணி நீடிப்பதும் இல்லை.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை நான் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே இருந்திருக்கிறேன். அவருக்கு நெருக்கடி வந்த சமயங்களிலெல்லாம் நான் அவருக்குத் துணையாகத்தான் இருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்களிலும் சரி மற்ற தேர்தல்களிலும் சரி அதிமுகவுக்காகத்தான் பிரச்சாரம் செய்தேன். எல்லா சமயங்களிலும் கூடவே இருந்திருக்கிறேன்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இன்னமும் ஒரு வாரத்தில் முடிவெடுப்பேன்.’
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.