Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Actor Vishal team captures many posts in Producer council election.

By   /  April 3, 2017  /  Comments Off on Actor Vishal team captures many posts in Producer council election.

    Print       Email

02CHVISHALதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது நடிகர் விஷால் அணி.

 

InCorpTaxAct
Suvidha

 

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் உள்ளிட்ட இதர பதவிகளுக்கு பெரும்பாலும் விஷால் அணியை சேர்ந்தவர்க்ளே வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மொத்தமாக 1059 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

இதனையடுத்து மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே விஷால் அணியினர் முன்னிலை பெற்று வந்தனர்.

இறுதியில் 143 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவர் பதவிக்கு விஷால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு  மொத்தம் 476 வாக்குகள் கிடைத்தது. அதேபோல், ராதாகிருஷ்ணனுக்கு 333 வாக்குகளும், கேயார் 223 வாக்குகளும் பெற்றனர்.

விஷால் அணி சார்பாக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர் பிரபு, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர். ஆனால், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மிஷ்கின் தோல்வியடைந்தார். எதிரணியில் இருந்த ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார்.

இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்க உள்ளார். இதனால் விஷால் அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளரிகளிடம் விஷால் பேசியதாவது:-

தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவரும் நன்றி. எங்கள் வெற்றி அடுத்த 2 ஆண்டுகள், சினிமாவிற்கு பொற்காலமாக அமையும். தயாரிப்பாளர் சங்கள் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும்

மாற்றம் வர வேண்டும் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக, பழி வாங்கும் நடவடிக்கைகாக இந்த வெற்றி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் தீர்வு காண விரும்பி இந்த வெற்றியை 201704022230310164_vishhalal._L_styvpfகொடுத்திருக்கிறார்கள்.

அத்தனை முதலாளிகளுக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியவை தடையில்லாமல் கிடைக்கும். பதவியேற்றதும் விவசாயிகள்,

தயாரிப்பாளர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

திருட்டு விசிடி விவகாரத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். தற்போது பதவிக்கு வந்துள்ளேன். நீயா, நானா பார்த்துவிடுவோம்(திருட்டு விசிடிகாரர்கள்).

இவ்வாறு கூறினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Bheeshma Movie Review: 3/5

Read More →