Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Actress  Suruthi’  cheated  many  IT  youngsters : ‘Married’  more  than  7-8  times

By   /  March 4, 2016  /  Comments Off on ‘Actress  Suruthi’  cheated  many  IT  youngsters : ‘Married’  more  than  7-8  times

    Print       Email

 

ஐ.டி இளைஞர்களை ஏமாற்றி ‘திருமணம்’ செய்த ‘நடிகை சுருதி’; பல இளைஞர்களைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி 201603040042465467_ActressPolice-to-arrest-intensity_SECVPFகோடிக்கணக்கில் பணம் சுருட்டல்.

InCorpTaxAct
Suvidha

கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சுருதி. வயது 21. இவர் இன்னமும் திரைக்குவராத இரண்டு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் இணையதள தகவல் மையத்தில் விண்ணப்பித்த பணக்கார வாலிபர்களைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறுவார். திருமணம் செய்துகொள்வதாக நிச்சயம் செய்துவிட்டு பணக்கார வாலிபர்களை ஷாப்பிங் அழைத்துச்சென்று லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டுவார். நாமக்கல்லைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் சந்தோஷ்குமார், சிதம்பரத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் அருள் குமர ராஜா ஆகியோரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இவரிடம் மேலும் பல கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் பணத்தை இழந்து இருப்பதும் இந்த மோசடிக்குப் பலர் உடந்தையாயிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது ; “சுருதி குறித்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துவருகிறது. இவரைத் திருமணம் செய்யும் ஆசையில் மேலும் பல இன்ஜினியர்கள் ரூ. 2 கோடிவரை பணத்தை இழந்திருப்பதாகத் தெரியவருகிறது. தன்னைக் கைது செய்யக்கூடாது என்று சுருதி கோர்ட்டில் தடையுத்தரவைப் பெற்று இருப்பதால் அந்தத் தடையாணையை நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். அந்தத் தடையாணை நீங்கியதும் சுருதியை நிச்சயம் கைது செய்து விசாரிப்போம். அப்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்தார் அந்த அதிகாரி.

இந்தப் பெண்ணிடம் ஏமாந்தது எப்படி என்பது குறித்து சந்தோஷ்குமார் என்பவர் கூறியதாவது; “எனக்குப் பெண் பார்த்து வந்தனர். இணைய தளத்தில் உள்ள திருமண தகவல் மையத்தில் எனது புகைப்படம் மற்றும் ஒன்றேகால் லட்சம் மாதம் சம்பளம் பெறும் விவரம் மற்றும் எனக்குத் தந்தை இல்லை என்ற விவரத்தைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே செல்போனில் தொடர்பு கொண்ட சுருதி என்னைப் பிடித்து இருப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். எனது தந்தை மரணம் அடைந்ததால் தாயை மட்டும் அழைத்துச் சென்று நிச்சய தாம்பூலத் தட்டு மாற்றிக்கொண்டோம்.

அதன்பிறகு அடிக்கடி சுருதி என்னை ஷாப்பிங் செல்லலாம் என்று கூறி அழைத்துச் செல்வார். விலை மதிப்புள்ள பொருள்களை வாங்கிக் குவிப்பார். எனது பணமும் காலியாகி வந்தது. இந்த நிலையில் சுருதிக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் மருத்துவ சிகிச்சை பெறவேண்டி இருப்பதாகவும் சுருதியின் தாய் சித்ரா என்னிடம் கூறினார். இதனால் சுருதியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பினேன். என்னிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும் அவரைப் பார்க்கவிடாமல் தாயார் சித்ரா தடுத்தார். அதன்பின்னர்தான் சுருதி என்னை ஏமாற்றியது தெரியவந்தது.

என்னைப்போல் கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் அருள்குமர ராஜா உட்பட ஆறு என்ஜியர்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி  ரூ. 2 கோடிக்கும்மேல் சுருதி சுருட்டியுள்ளார். இதுதவிர வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பட்டதாரி வாலிபர்களிடமும் சுருதி பணத்தைச் சுருட்டியுள்ளார். சுருதியிடம் ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என்று இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். சுருதி பெரும்பாலும் தந்தை இல்லாத பணக்கார வாலிபர்களைக் குறிவைத்துத்தான் மோசடி செய்துள்ளார். நடிகையாக பணம் சம்பாதிப்பதை விட திருமண ஆசை காண்பித்து பணக்கார வாலிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டலாம் என்ற ஆசையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சுருதியின் தந்தை என்ற பெயரில் பிரசன்ன வெங்கடேசன் என்பவர்  உடன் இருப்பார். இவர் உண்மையில் சுருதியின் தந்தை இல்லை. இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பவர். எனவே இவர்களை கூண்டோடு கைது செய்து விசாரித்தால்தான் மேலும் பல மர்மங்கள் தெரியவரும்” இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →