Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

ADMK  is  dictatorial – says Vaiko.

By   /  February 23, 2016  /  Comments Off on ADMK  is  dictatorial – says Vaiko.

    Print       Email

TH09_VAIKO_1833682fஅதிமுக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது – வைகோ பேச்சு.

தமிழகத்தில் அதிமுக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கரூரில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணி சார்பாகப் பேசிய வைகோ கூறியதாவது;

InCorpTaxAct
Suvidha

தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம் என்று ஒரு இளைஞர் கூறுகிறார். ஆட்சியில் இருந்த போது அதனை செய்யாமல் இப்போது உறுதியளிக்கிறார். அ.தி.மு.க. ஆட்சி ஒரு சுயமரியாதை இல்லாத அமைப்பு. சர்வாதிகார ஆட்சியை அது நடத்துகிறது. அ.தி.மு.க. ஆட்சி மக்களை நரகத்திற்கும், தி.மு.க. ஆட்சியோ படுநரகத்திற்கும் கொண்டு சேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:–

சில அரசியல் கட்சிகள் எங்கே சென்றால் வாழ்வு கிடைக்கும், லாபம் கிடைக்கும் என்று லாப நஷ்ட கணக்கு போட்டு கூட்டணிக்காககாத் திருக்கிறார்கள். ஆனால் மக்கள் நல கூட்டணி மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. எந்தவித குழப்பமும், தடுமாற்றமும் இல்லாமல் 7 மாதத்திற்கு முன்பே இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் இந்த கூட்டணி உடைந்து விடும் என்று தற்போது சிலர் முகநூலில் செய்திகள் பரப்பி வருகிறார்கள். இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.

தமிழக அரசியலில் நாங்கள் இப்படியொரு நிலையை எடுப்போம் என்று கருணாநிதியோ, ஜெயலலிதாவோ நினைத்திருக்க மாட்டார்கள். காத்து கிடப்பார்கள், கடைசியில் கூப்பிட்டால் வருவார்கள் என்று நினைத்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பில் இடி விழுந்து விட்டது.

வேறு வழியில்லாமல் உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. புதிய வழிக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. 1967–க்கு பின்னர் புதிய அரசியல் மாற்றத்திற்கு அடித்தளத்தை மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மது, ஊழல் இல்லாத வகுப்பு வாத சக்திகளுக்கு இடமளிக்காத, சமூக நல்லிணக்கத்தை பேணும் தேசமாக தமிழகம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →