ஹிட்லர் பயன்படுத்திய டெலிபோன் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இரண்டாம் உலக போரின் போது அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தனிப்பட்ட டெலிபோன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறம் கொண்ட பேக்லைட் போன் பின்னர் க்ரிம்சன் நிறம் பூசப்பட்டு ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
நாஸி தலைவரின் பன்க்கரில் 1945 ஆம் ஆண்டு இந்த டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டது. ஏலம் நடத்தும் அலெக்சாண்டர் ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன்ஸ் நிறுவனம் இந்த டெலிபோன் 200,000 முதல் 300,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகும் என கணித்துள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியான மேரிலாந்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் பல்வேறு இதர பொருட்களும் ஏல முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இரண்டாம் உலக போரின் கடைசி இரண்டு ஆண்டுகளின் போது இந்த டெலிபோன் மூலம் ஹிட்லர் தனது உத்தரவுகளை பிறப்பித்தார் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த சாதனத்தை ப்ரிட்டனை சேர்ந்த சர் ரால்ஃப் ரேனருக்கு பரிசாக வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.