ஐஸ்வர்யா ராய், ரண்பீர் கபூர் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் இருவரும் நடித்த மிக நெருக்கமான மூன்று காட்சிகளை வெட்டியது தணிக்கைத் துறை.
ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருந்தார். ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஐஸ்வர்யாராய் அரைகுறை ஆடையில் நடித்து இருந்தார்.
அபிஷேக்பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு வந்த படங்களில் இந்த அளவுக்கு அவர் கவர்ச்சியாக நடிக்க சம்மதிக்கவில்லை என்றும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இப்படி கவர்ச்சியாக நடித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் இந்தி பட உலகினர் முணுமுணுத்தனர். ஐஸ்வர்யாராயே கதைக்கு கவர்ச்சி தேவை என்று சொல்லி இயக்குனரை வற்புறுத்தி இந்த காட்சிகளை படமாக்க வைத்ததாகவும் தகவல் வெளியானது.
அவர் கவர்ச்சியாக நடித்ததால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாகவும் மாமியார் ஜெயாபச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. கணவர் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் தணிக்கைக்கு அனுப்பி ‘வைக்கப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஐஸ்வர்யாராயின் படுக்கையறை காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும் அந்த காட்சிகள் குழந்தைகள் மன நிலையை பாதிக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்ச்சி காட்சிகளை அவர்கள் வெட்டி எறிந்து விட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்தனர்.
கவர்ச்சியான காட்சிகள் மூலம் வயதை மறைத்து மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு தணிக்கை குழுவினரின் நடவடிக்கைகள் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.