Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Afghanisthan  stuns  West  indies  by  winning  in  6 runs.

By   /  March 27, 2016  /  Comments Off on Afghanisthan  stuns  West  indies  by  winning  in  6 runs.

    Print       Email

517755510_1459082813வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான்.

உலக கோப்பை போட்டியில் நாக்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்– ஆப்கானிஸ்தான் (குரூப் 1) அணிகள் விளையாடின.

InCorpTaxAct
Suvidha

டாஸ் வென்ற வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இன்றைய போட்டியில் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி மன்னன் முகமது ஷெசாத் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் அஸ்கார் 16 ரன்களில் பத்திரி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதும் நஜிபுல்லா ஜாத்ரன் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பத்திரி 3 விக்கெட்களையும், ரசல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அறிமுக வீரர் எவின் லிவிஸ் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான சார்ல்ஸ் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஹமித் பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய பிளட்சர் காயம் காரணமாக 11 ரன்னில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுப்பெற்ற சாமுவெல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராவோ மட்டும் நிலைத்து நின்று ஆடி 28 ரன்கள் எடுத்து நபி பந்தில் ஆட்டமிழந்தார்.

சமியும் 6 ரன்னில் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. அடுத்து களமிறங்கிய பார்த்வெயிட் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடிக்க, 20-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பத்திரி 1 ரன் எடுக்க அடுத்த பந்தில் பார்த்வெயிட் அடித்த பந்தை நஜிபுல்லா அற்புதமாக கேட்ச் பிடிக்க அந்த அணியின் தோல்வி உறுதியானது. கடைசி இரு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகனாக நஜிபுல்லா தேர்வு செய்யப்பட்டார். வலுவான அணியான வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்திவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →