Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

After Coimbatore, its Thirunelveli Governor goes for ‘discussion’

By   /  December 6, 2017  /  Comments Off on After Coimbatore, its Thirunelveli Governor goes for ‘discussion’

    Print       Email

கோவையை தொடர்ந்து நெல்லையிலும் அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு

 

Suvidha
Biryani Pot

 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தூய்மை இந்தியா திட்ட செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். கவர்னரின் இந்த நடவடிக்கையை பல்வேறு கட்சிகள் விமர்சித்தன. கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பும் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காக நெல்லை வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிற்பகலில் நெல்லையில் ஆய்வு நடத்த உள்ளார். இதற்காக கவர்னர் ஓய்வெடுக்கும் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம், நெல்லை மாநகர போலீஸ் கமிசனர் கபில்குமார் சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு அவர் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்கிறார்.

மேலும் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கிறார். ஒருமணி நேரம் மக்களிடம் மனுக்கள் வாங்கும் அவர் பின்னர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக கவர்னர் தூத்துக்குடியில் இருந்து காரில் வரும் வழியில் அதிரடியாக அவர் காரில் இறங்கி ஆய்வு செய்யக்கூடும் என்று அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் கவர்னர் வரும் பாதையில் கடந்த 2 நாட்களாக சாலைகளை பராமரித்து, சுகாதார பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் அவசர கதியில் செய்தது.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TANA will not let criminals run our well earned reputation, Satish Vemana

Read More →