Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

After  Kabali  Ranjit  may  go  with Surya  or  Karthi.

By   /  March 8, 2016  /  Comments Off on After  Kabali  Ranjit  may  go  with Surya  or  Karthi.

    Print       Email

Ranjith_2157718f‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து சூர்யா அல்லது கார்த்தியை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ருத்விகா, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு 2 படங்கள் இயக்க இருக்கிறார் ரஞ்சித். ஒரு படத்தில் சூர்யா நாயகனாகவும் மற்றொரு படத்தில் கார்த்தி நாயகனாகவும் நடிக்க இருக்கிறார்கள்.

முன்னதாக, சூர்யாவுக்கு கதை எல்லாம் முடிவாகி படப்பிடிப்புக்கு போகக் கூடிய சூழ்நிலையில் தான் ரஜினி படத்தை இயக்க ஒப்புக் suriya-karthiகொண்டார் ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ரஜினி படம் என்பதால் அப்படத்தை முடித்துவிட்டு எங்கள் நிறுவனத்துக்கு படம் இயக்குங்கள் என்று ரஞ்சித்திடம் தெரிவித்திருக்கிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு இயக்கவிருக்கும் 2 படங்களில் முதல் படத்தின் நாயகன் சூர்யாவா அல்லது கார்த்தியா என்பதை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →