அப்சல்குரு வழக்கு சரியாகக் கையாளப்படவில்லை- ப.சிதம்பரம் கருத்து.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குரு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக இருந்தபோது அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிதித்துறை மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்த ப.சிதம்பரம் தற்போது ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அப்சல் குரு மீதான வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“அப்சல் குரு வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. பாராளுமன்றம் மீதான தாக்குதலில் அப்சல் குருவுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மிகப்பெரும் சந்தேகம் உள்ளது. அரசு தரப்பில் என்ன தான் கூறினாலும், நீதிமன்றம் தவறான முடிவு எடுக்கும் போது என்ன செய்ய முடியும். ஏனெனில் அப்சல் குரு அரசால் குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால் ஒரு தனி மனிதனாக, இந்த வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.