Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Again  sharath kumar  joins  AIADMK  alliance.

By   /  March 23, 2016  /  Comments Off on Again  sharath kumar  joins  AIADMK  alliance.

    Print       Email

 CHENNAI : 18/03/2011 : AIADMK General Secretary J. Jayalalithaa with All India Samathuva Makkal Katchi President Sarath Kumar after signing the seat-sharing agreement for the forthcoming Tamil Nadu Assembly election at Poes Garden, in Chennai on Friday. Photo : AIADMKமீண்டும் அதிமுகவுடன் இணைந்தார் சரத்குமார்.

அதிமுகவுடன் இணைந்து சமக தேர்தலில் செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் மீண்டும் இணைத்துள்ளன என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததாக சரத்குமார் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதற்குப் பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று சரத்குமார் கூறினார். இந்நிலையில், போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று (புதன்கிழமை) சந்தித்தார் சரத்குமார்.

அதற்குப் பிறகு சரத்குமார் பேசுகையில், ”அதிமுகவுடன் இணைந்து சமக தேர்தலில் செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் மீண்டும் இணைத்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →