Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Agitation spreads across Tamil Nadu: Students join to support farmers

By   /  March 29, 2017  /  Comments Off on Agitation spreads across Tamil Nadu: Students join to support farmers

    Print       Email

manavar1_3148678fவிவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

 

InCorpTaxAct
Suvidha

 

மெரினா கடற்கரையில் இன்று காலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். 25 பேரை பிடித்து சென்றிருப்பதாகவும், அவர்களிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி விடுவோம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

முன்னதாக அவர்கள் கூறுகையில், தமிழகத்தின் வாழ்வாதாரமே விவசாயம் தான். ஆனால் தலைநகர் டெல்லியில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இது கண்டனத்திற்குரியது என்றனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்றிரவு சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் விவசாயிகளை ஆதரித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இன்று, தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் சில்வர் பீச்சில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முகநூல் நண்பர்கள் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இதையொட்டி சில்வர் பீச்சில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சியில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சியில் மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →