அதிமுகவுக்குத் தேர்தல் அறிக்கைக்கூடத் தயாரிக்க முடிவில்லை- குஷ்பு கிண்டல்.
அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தோல்வி பயம் காரணமாக தான் அதிகாரிகளை மாற்றக்கூடாது என தேர்தல் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர். என்று நடிகை குஷ்பு கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகம் முழுவதும் சென்று தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். இந்த கூட்டணியை வெற்றி பெறச்செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. அவர்களால் தேர்தல் அறிக்கையை கூட தயாரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழம்பி போய் உள்ளனர். தமிழகத்தில் 7 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. தமிழகத்தில் தொழில்வளம் இல்லாதது தான் இதற்கு காரணம். மின் உற்பத்தி சரியாக இல்லாததால் தொழில்வளம் பெருகவில்லை.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அதிகாரிகளை மாற்றி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தோல்வி பயம் காரணமாக தான் அதிகாரிகளை மாற்றக்கூடாது என தேர்தல் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த முறை மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.