தமிழகத்தில் 130 தொகுதிகளைப் பிடித்து அதிமுக மறுபடியும் ஆட்சி அமைக்கும். சி-ஓட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்.
தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா டிவி-சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. 70 தொகுதிகளிலும், விஜயகாந்த் தலைமையிலான அணி 30 முதல் 34 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வாக்குகளில் அ.தி.மு.க. 39 சதவீத வாக்குகளையும், தி.மு.க. 32 சதவீத வாக்குகளையும் பெறும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுவையைப் பொருத்தவரையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதற்கு முன் வெளியிடப்பட்ட ஏனைய கருத்துக்கணிப்புகளில் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதாக ஒரு நிறுவனமும், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் ஒரு சதவிகிதம் மற்றும் ஒன்றரை சதவிகிதம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றன என்று வேறு கருத்துக்கணிப்புகளும் தகவல் தெரிவித்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.