Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

AIADMK wins all 3 constituencies in Tamil Nadu.

By   /  November 22, 2016  /  Comments Off on AIADMK wins all 3 constituencies in Tamil Nadu.

    Print       Email

aiadmk-500x500தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி.

கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

InCorpTaxAct
Suvidha

இதையடுத்து 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேலு பதவி ஏற்கும் முன்பு மே 25-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த 3 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தஞ்சை தொகுதியில் 69.41 சதவீதமும், அரவக்குறிச்சியில் 82.05 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71 சதவீதமும் ஓட்டுகள் பதிவான.

தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி (அ.தி.மு.க.), அஞ்சுகம் பூபதி (தி.மு.க.), அப்துல்லாசேட் (தே.மு.தி.க.), குஞ்சிதபாதம் (பா.ம.க.), ராமலிங்கம் (பா.ஜனதா), நல்லத்துரை (நாம் தமிழர் கட்சி) உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.), செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.), பிரபு (பா.ஜனதா), பாஸ்கரன் (பா.ம.க.), முத்து (தே.மு.தி.க.), அரவிந்த் குருசாமி (நாம் தமிழர்) உள்பட 39 போட்டியிட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), சீனிவாசன் (பா.ஜனதா), தனபாண்டியன் (தே.மு.தி.க.), மகாதேவன் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட 28 பேரும் போட்டியிட்டனர்.

3 தொகுதிகளுக்கும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

தஞ்சை தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி முன்னிலையில் இருந்தார். 20 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி அமோக வெற்றி பெற்றார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதியை விட 26 ஆயிரத்து 846 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். தஞ்சை தொகுதியில் இருந்து ரெங்கசாமி 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி 88.068 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி 64,395 வாக்குகளும் பெற்றனர். செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

இதே போல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே. போஸ் 1,13,032 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 70,362 வாக்குகளும் பெற்றனர். ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →