Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Ajit Jogi Launches new party swears by state identity.

By   /  June 7, 2016  /  Comments Off on Ajit Jogi Launches new party swears by state identity.

    Print       Email

dc-Cover-7rvh0mr6j0qi9bm98riuqsf3a5-20160206152611.Mediகாங்கிரசில் இருந்து விலகிய அஜித் ஜோகி; புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு.

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் ஜோகி கட்சியில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு விலகினார். விலகும் போது அவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘காங்கிரஸை பற்றியோ அல்லது சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் பற்றியோ நான் கருத்து தெரிவிக்க போவதில்லை. ஆனால், அவர்களுக்கு ‘குட் நைட்’ சொல்லி வாழ்த்துகிறேன். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. இப்போது இருப்பது வேறு மாதிரியான காங்கிரஸ்’’ என்று தெரிவித்திருந்தார்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித் ஜோகி புதிய கட்சி தொடங்குவதாக நேற்று அறிவித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான மார்வாஹியில் உள்ள கோட்மி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சியை பற்றி கூட்டத்தில் குறை எதுவும் அவர் கூறவில்லை. கட்சியின் சின்னம் எதனையும் அவர் அறிவிக்கவில்லை.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்த திடீர் முடிவு குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு முதலே இதனை நான் திட்டமிட்டு வந்தேன். இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இப்போது நான் சுதந்திரமானவன். நமது மாநிலத்தில் அதிக அளவில் இயற்கை வளங்கள் இருந்தும், அதன் பலனை நம்மால் பெற முடியவில்லை. இதனை நான் தடுக்க விரும்பினேன்.

மக்களுடைய கருத்துக்களை கேட்ட பின்பு கொடி, சின்னம் மற்றும் கட்சியின் பெயர் உள்ளிட்டவை முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

–அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →