Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Ajith  pair  with  Shruthi  Hassan : shooting  from  June.

By   /  March 30, 2016  /  Comments Off on Ajith  pair  with  Shruthi  Hassan : shooting  from  June.

    Print       Email

ajith-kumar-2830அஜித்தின் அடுத்த ஜோடி ஸ்ருதி ஹாசன். சத்யஜோதி தயாரிப்பு ஜூனில் தொடங்கும்.

ஜூன் மாதம் முதல் அஜித் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்தார்.

InCorpTaxAct
Suvidha

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வேதாளம்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். 2015 தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

அஜித்தின் அடுத்த படம் ஜூன் 2016ல் தான் தொடங்கப்படும் என்பதும் சிவா இயக்க இருக்கிறார் என்பதும் உறுதியானது.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க இருக்கும் சத்யஜோதி தியாகராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது, “நான் – அஜித் – சிவா மூவருமே இணைந்து படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அஜித்துடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதி செய்யப்படும்.

shruti hassan

shruti hassan

ஏப்ரல் 2ம் வாரத்தில் படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். இப்படத்துக்கு அனிருத் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →