தேர்தல் அறிவிப்பு வரட்டும். என்னுடைய திட்டங்களை அறிவிக்கிறேன் – அழகிரி பேட்டி.
சென்னை வந்த மு.க. அழகிரி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
பதில்:– தேர்தல் வரும்போது, நெருங்கும் போது எனது நிலைப்பாட்டையும், முடிவையும் தெரிவிப்பேன்.
கேள்வி:– கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உங்களின் ஆதரவாளர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களே?
பதில்:– என்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. அப்படி நீக்க வேண்டும் என்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.