அழகிரி திரும்பவும் திமுகவுக்கு வருவார் என்பது ஒரு வதந்தி –ஸ்டாலின் பேட்டி.
அழகிரியின் பிறந்த நாளன்று அழகிரி திமுகவுக்குத் திரும்பவார் என்ற ஒரு செய்தி சிறிது நாட்களாக ஊடகங்களில் அடிபட்டு வந்தது. இது சம்பந்தமான கேள்வியைத் தவிர்த்த கனிமொழியிடம் திரும்பத் திரும்ப இதே கேள்வி வைக்கப்பட அவர் மைக்கைத் தட்டிவிட்டு எழுந்து சென்றவிட்டார் என்ற செய்தியும் வலம் வந்தது. அழகிரியின் பிறந்தநாளும் சென்றுவிட அம்மாதிரியான நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.
நமக்கு நாமே திட்டத்தின் ஒரு அங்கமாக கோயம்பேடு வியாபாரிகள் மத்தியில் பேசுவதற்காக வந்த திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். “அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது நான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தேவையில்லை” என்றார். தொடர்ந்து அதே கேள்வி வைக்கப்படவே “இல்லை அது ஒரு வதந்தி” என்று சொல்லி அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.