Loading...
You are here:  Home  >  Amazing Science  >  Current Article

Alfred  E mann, who invented  Pace maker  is no more

By   /  February 27, 2016  /  Comments Off on Alfred  E mann, who invented  Pace maker  is no more

    Print       Email

asdsdஇதய நோயாளிகளுக்கு பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானி ஆல்பிரட் இ மான் காலமானார்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.

Suvidha
Biryani Pot

சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான், வரிசையாக பல தொழில்களை தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக துலங்கியதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்த இவர் பெரும் கொடையாளராகவும் விளங்கினார்.

-அமுதவன்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

NRI Scientist Invents New Antidotes for Chemical Warfare Agents

Read More →