Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

All 3 teams in the AIADMK are 420, says DMK MLA J.Anbazhagan.

By   /  August 12, 2017  /  Comments Off on All 3 teams in the AIADMK are 420, says DMK MLA J.Anbazhagan.

    Print       Email
.தி.மு..வில் உள்ள 3 அணிகளும் 420தான்: ஜெ.அன்பழகன் தாக்கு
 சென்னை மேற்கு மாவட்ட தி.மு.. இலக்கிய அணி சார்பில் 
அண்ணா அறிவாலயத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் 
போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் 
எம்.எல்.. தொடங்கி வைத்து பேசினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி 
அளித்தார். அவர் கூறியதாவது:-

.தி.மு..வில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

டி.டி.வி.தினகரன் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து 420 (மோசடி) என்கிறார். எடப்பாடி பழனிசாமி டி.டி.வி.தினகரனை 420 என்கிறார். இவர்களை பார்த்து .பன்னீர்செல்வம் அணியினர் 420 என்கிறார்கள். மொத்தத்தில் .தி. மு..வில் உள்ள 3 அணியுமே 420தான்.

EIS
EnGeniusInc

.தி.மு..வில் நம்பர்-1 420 யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது.

இந்த ஆட்சி மீது தேவைப்பட்டால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று தான் செயல் தலைவர் மு..ஸ்டாலின் கூறி இருக்கிறார். எனவே உடனே கொண்டு வருவதாக அர்த்தம் இல்லை.

நடிகர் கமல்ஹாசன் உதவியுடன் தி.மு.. இதை செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக கேட்கிறீர்களே? இதில் கமல்ஹாசனுக்கு என்ன வேலை? நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் கமலுக்கும் சம்பந்தம் இல்லை. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எம்.எல்..க்கள்தான் பங்கேற்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

Devineni Uma didn’t comment on Revanth Reddy..

Read More →