Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

All AIADMK candidates filed their nomination papers same time in their respective constituencies.

By   /  April 28, 2016  /  Comments Off on All AIADMK candidates filed their nomination papers same time in their respective constituencies.

    Print       Email

01apr_dgrajhi2__02_1821964gஅனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. ஆகிய 5 கூட்டணிகளிடையே ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 22-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி இருவரும் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் நிறுவனர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று தங்கள் தொகுதிக்குட்பட்ட அதிகாரிகளிடம் வேட்புமனுவை கொடுத்தனர்.

இதுவரை 4 நாட்கள் நடந்துள்ள வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் சுமார் 250 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஐந்தாவது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. இன்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் 233 வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

19_thsri_valar_2282664fஅ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 25-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அதே தினத்தன்றே 233 தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும் மனு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளர் கூட அன்று மனுதாக்கல் செய்யவில்லை.

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 233 தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமை மதியம் 12.50 மணி முதல் 1.20-க்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இன்று மதியம் 12.50க்கு மேல் 1.20 வரை குரு ஹோரை உச்சத்தில் இருப்பதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் 233 அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும், மாற்று வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கு வசதியாக 233 வேட்பாளர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதம் நேற்று வழங்கப்பட்டது. மற்ற ஆவணங்கள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை ஒருங்கிணைத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் 226 பேரும், கூட்டணி வேட்பாளர்கள் 7 பேரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்பு மனு கொடுத்து அவர்கள் உறுதி மொழியை வாசித்தனர்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 233 பேரையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 9-ந்தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய 8 கூட்டங்களில் 233 அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மே 2-ந்தேதி மாலை 234 தொகுதகிளிலும் பலப்பரீட்சை நடத்தும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →