சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்திற்கு தடை: பள்ளியின் முடிவை எதிர்த்து 8 ஆசிரியர்கள் ராஜினாமா
உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வரும் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் மாணவர்கள் தேசிய கீத பாடலை பாடக்கூடாது என்று அப்பள்ளியின் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்தியிருந்த நிலையில், சுதந்திர தினத்தில் பள்ளியில் தேசிய கீதம் பாடாமல் எப்படி நிகழ்ச்சி நடத்துவது? என்று கேட்டிருந்தார்.
தங்களது உத்தரவிற்கு எதிராக உள்ளவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறலாம் என்று நிர்வாகம் கூறியது. இதனால், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்து, மேலாளர் மற்றும் பள்ளியின் உரிமையாளருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் தேசிய கீதம் உள்பட நாட்டுபற்றுள்ள பாடல்களை பாடக்கூடாது என்று அதன் நிர்வாகம் சொல்ல முடியாது. இதுபற்றிய விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என மாவட்ட தொடக்கநிலை கல்வித்துறை அதிகாரி ஜெய்கரன் யாதவ் கூறியுள்ளார்.
தேசிய கீதம் பாடக்கூடாது என்பதற்காக பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்டுத்தியதையடுத்து, இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேசம் மாநில தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளிகளின் நிர்வாகிகள் ஏற்கனவே சரஸ்வதி வந்தனம் மற்றும் வந்தே மாதரம் பாடலுக்கும் தடை வித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Amudhavan.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.