Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Along with S.M.Krishna Actress Ramya also joins BJP

By   /  March 21, 2017  /  Comments Off on Along with S.M.Krishna Actress Ramya also joins BJP

    Print       Email

522729-kannada-actress-egg-attackஎஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நடிகை ரம்யாவும் பாஜகவில் இணைகிறார்.

 

InCorpTaxAct
Suvidha

 

 

நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் நடித்தவர் ரம்யா. இவர் தனுசுடன் பொல்லாதவன் படத்திலும் நடித்துள்ளார். சூர்யா, ஜீவா, அர்ஜூன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவர் ஏற்கனவே எம்.பி.யாகவும் இருந்து உள்ளார்.

இவர் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கர்நாடக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் நாகன்னகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் பிடித்துள்ளது. இதனால் அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நடிகை ரம்யாவிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா பாரதிய ஜனதாவில் இணைய உள்ளார். இது தவிர மேலும் பலர் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரசில் உள்ள தலைவர்களை பாரதிய ஜனதாவில் சேர்க்கும் முயற்சியில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா ஈடுபட்டு வருகிறார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவும் பச்சைகொடி காட்டி உள்ளார்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →