15 வயதுப் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார் அமலா பால். ‘தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி’ என்று பேட்டி.
‘இளம் நடிகைகள் பலரும் அம்மாவாக நடிக்கத் தயங்கும் காலகட்டத்தில் மிகத் துணிச்சலாக 15 வயது பெண்ணுக்கு தாயாக ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்துள்ளார்
மீன் கடை, மாவுக் கடை உள்ளிட்ட பல இடங்களில் பெண் குழந்தையின் படிப்புக்காக வேலை செய்யும் அம்மாவாக நடித்திருக் கிறேன். இப்படத்தில் வரும் மீன் மார்க்கெட் காட்சிகளுக்காக மார்க்கெட் டுக்கு சென்று எப்படி மீன் விற்கிறார் கள் என்று பார்த்து 3 நாட்கள் நடித் துக் கொடுத்தேன். எனது மனதுக்கு மிக நெருக்கமான ஒரு படமாக இப்படம் அமைந்துள்ளது.
என்னுடைய நடைமுறை வாழ்க் கையில் இருந்து நிறைய மாற வேண்டி இருந்தது. தமிழில் ‘மைனா’ படத்துக்குப் பிறகு எனக்கு ரொம்ப சவாலான பாத்திரம் இது. பொறியாளர், டாக்டர் என்று நடிக்கும்போது, நம்மால் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அம்மா பாத்திரத்தில் நடிக்கும்போது எப்படி கற்றுக் கொள்வது என நினைத்து என் அம்மாவுடன் அவரை பேட்டி எடுப்பது போல் நிறைய பேசினேன். என் உதவியாளரின் வீட்டுக்கு சென்று அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பார்த்தேன். இதனால் எனக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். தெரியாது. தேசிய விருது கிடைத்தால் சந்தோஷம். கிடைக்க வில்லை என்றால் அடுத்த படங்களில் இன்னும் முயற்சி செய்வேன். அவ்வளவுதான்.
ஆண் இயக்குநரிடம் நாம் எல்லா விஷயங்களையும் பேசிவிட முடி யாது. அஸ்வினி ஐயர் பெண் இயக்கு நர் என்பதால் என்னுடைய மனநிலை யைப் புரிந்துகொள்வார். நான் ஒரு அம்மாவாக இல்லாததால், இப்படத்தில் எனக்கு இருந்த சந்தேகங்களை அவர் சொல்லிக் கொடுத்தார்.
நான் இப்படத்தைப் பற்றி சொன்ன வுடன் எனது கணவர் மிகவும் சந்தோஷமாகி விட்டார். நான் இதுபோன்ற படங்களில் நடிக்கவேண்டும் என்பதே அவரது ஆசை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நான் நடித்திருப்பதைப் பெருமையாக நினைத்தார். இப் படத்தை பார்த்துவிட்டு ‘நான் அம்முவைப் பார்க்கவில்லை, சாந்தியைத்தான் பார்த்தேன்’ என்றார்.
திருமணத்திற்குப் பின் எனக்கு வரும் கதைகளில் நல்ல கதையைத் தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். குறிப்பிட்ட பாத்திரங்களைத்தான் செய்வேன் என்றெல்லாம் இல்லை. எனக்கு அனைத்து கதை களங்களிலும் படம் பண்ண ஆசை. ஒரு சிறந்த நடிகையாக அது முக்கியம் என்று நினைக்கிறேன்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.