
‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 12–ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் நடிப்பு தொழிலை தொடர்ந்து மேற்கொண்டதால், அதற்கு விஜயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயும், அமலாபாலும் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 2–வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி பூங்குழலி முன்பு கடந்த 18–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் – அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூங்குழலி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை அமலாபால் – விஜய் ஆகியோருக்கு விவாகரத்து வழங்குவதாக நீதிபதி பூங்குழலி கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.