Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

American  Supreme  Court judge:  Sreenivasan  missed  the  chance.

By   /  March 17, 2016  /  Comments Off on American  Supreme  Court judge:  Sreenivasan  missed  the  chance.

    Print       Email

Sri-Sreenivasan-Sworningஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி; வாய்ப்பை இழந்தார் சீனிவாசன்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்காலியா கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய இடத்தை நிரப்ப புதிய நீதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.

InCorpTaxAct
Suvidha

இந்த வாய்ப்பில் முதலிடத்தில் அமெரிக்க இந்தியரான சீனிவாசன் இருந்தார். அவர் தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு மெரிக் கார்லேண்ட் என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அறிவித்தார். இது குறித்து ஒபாமா கூறுகையில், கார்லேண்ட் மிகவும் நேர்மையானவர், பண்பு உள்ளவர். பரிந்துரையில் உள்ள மற்ற நீதிபதிகளை விட கார்லேண்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.

எனவே அவரை தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கார்லேண்ட், 1995-ம் ஆண்டு ஒக்லஹோமா நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் வழக்கை மிகவும் திறம்பட கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை ஒபாமா தேர்வு செய்வதற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய அதிபர் வந்த பிறகே புதிய நீதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளதால் புதிய நீதிபதியை ஒபாமா அறிவித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்பவருக்கு பணி ஓய்வே கிடையாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக இருக்கலாம். ஒபாமாவின் இந்த அறிவிப்பால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியரான சீனிவாசன் அந்த வாய்ப்பை இழந்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →