Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Amit Shah Overrules Angry Anandiben To Pick New Gujarat Chief Minister

By   /  August 6, 2016  /  Comments Off on Amit Shah Overrules Angry Anandiben To Pick New Gujarat Chief Minister

    Print       Email

201608061546584974_Gujarat-Rupani-meets-Guv-to-stake-claim-swearing-in-tomorrow_SECVPFகுஜராத்தில் ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார் விஜய் ரூபானி: நாளை பதவியேற்பு விழா

குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனக்கு 75 வயது ஆவதை காரணம் காட்டி இந்த முடிவினை எடுத்ததாக அவர் கூறினார். இதனை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த புதன்கிழமை முறைப்படி குஜராத் கவர்னர் கோலியிடம் ஆனந்தி பென் பட்டேல் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

பின்னர் அகமதாபாத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் குஜராத்தின் அடுத்த முதல்வராக மாநில தலைவர் விஜய் ரூபானி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் விஜய் ரூபானி இன்று கவர்னர் ஓ.பி.கோலியைச் சந்தித்து புதிய ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் மாநில பா.ஜ.க. பொறுப்பாளர், சர்மா, துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிதின் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றிருந்தனர். பதவி விலகிய ஆனந்திபென் பட்டேல் செல்லவில்லை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தினேஷ் சர்மா கூறியதாவது:-

கவர்னரை சந்தித்தபோது, மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி, துணை முதல்வராக நிதின் பட்டேல் ஆகியோரை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்திருப்பதாக கூறினோம். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தோம். அப்போது பதவியேற்பு விழாவினை நாளை பகல் 12.40 மணிக்கு நடத்தலாம் என கவர்னர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, நாளை பகல் 12.40 மணிக்கு விஜய் ரூபானி முதல்வராகவும், நிதின் பட்டேல் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தவிர யார் யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

-Amudhavan.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →