Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Amit Shah to remain BJP chief, Gujarat MLA’s to pick new Chief Minister

By   /  August 4, 2016  /  Comments Off on Amit Shah to remain BJP chief, Gujarat MLA’s to pick new Chief Minister

    Print       Email

916191129குஜராத் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய அமித்ஷாவுக்கு அதிகாரம்: பா.ஜனதா தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

டெல்லியில் நடைபெற்ற பா.ஜனதா தலைவர்கள் கூட்டத்தில், குஜராத் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்து வந்த பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஆனந்திபென் பட்டேலுக்கு விரைவில் 75 வயது நிறைவடைய இருக்கிறது. 75 வயதான தலைவர்கள் தாங்கள் வகித்து வரும் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே விதிமுறை வகுத்து உள்ளதால், முதல்-மந்திரி பதவியை விட்டு விலக விருப்பம் தெரிவித்து ஆனந்திபென் பட்டேல் கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு பாரதீய ஜனதா மேலிடம் சம்மதம் தெரிவித்தது.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்ததால், அவர் பதவி விலகுவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்து எடுப்பது என்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை.

புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக மத்திய மந்திரி நிதின் கட்காரி, பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுப்பது பற்றி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

கட்சியின் தலைவராக இருக்கும் அமித்ஷாவை குஜராத் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கும் கேள்விக்கே இடம் இல்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை. அவரது பணி தேசிய அளவில் தேவைப்படுகிறது. அமித்ஷா குஜராத் மாநில எம்.எல்.ஏ.யாக இருப்பதால், முதல்-மந்திரியை தேர்வு செய்ய நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார். அவர் மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் விரிவாக ஆலோசனை நடத்துவார். அதன்பிறகு புதிய முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்படுவார்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுக்கும் அதிகாரம் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது மந்திரியாக இருக்கும் நிதின் பட்டேல், குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவராக இருக்கும் விஜய் ரூபானி ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.

இதற்கிடையே, ஆனந்திபென் பட்டேல், நேற்று மாநில கவர்னர் ஓ.பி.கோஹ்லியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →