ஆர்.கே நகர் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரபல நடிகை எமி ஜாக்சன் பிரசாரமா?
ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரத்தை களமிறக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், மதராசபட்டணம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
மதராசபட்டணம் படத்தில் எமி ஆங்கிலேய பெண்மணியாக, தொப்பி அணிந்து நடித்திருந்தார்.
இதனால், அந்த தொப்பிகள் மக்களிடையே மிகவும் பேசப்பட்டது. அதை கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலமாக எமி ஜாக்சனை பிரசாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.
ஆனால் எமி ஜாக்சனுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் தமிழ் தெரியாது அவர் எப்படி ஓட்டு கேட்பார்? இது உண்மையாக இருக்கவாய்ப்பு இல்லை என ஒருதரப்பால் கூறப்படுகிறது. இது வதந்தியாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.